அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய சுமார் இரண்டாயிரம் பேருக்கு அபராதம்

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய சுமார் இரண்டாயிரம் பேருக்கு அபராதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் சட்டத்தை மீறி பயணித்த சுமார் இரண்டாயிரம் பேருக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதற்கமைய கடந்த 19 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, வாகனங்களில் ஆசனப்பட்டி வசதி இருந்தும் அதனை அணியாது அதிவேக வீதிகளில் பயணித்த சுமார் ஆயிரம் பயணிகளுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதி பாதுகாப்புக் பிரிவினரால் அதிவேக வீதிகளுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்து இடங்களிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத எந்தவொரு வாகனமும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT