நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 இலட்சம் இழப்பீடு

தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 இலட்சம் இழப்பீடு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் மற்றும் கலவரத்தின்போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு, சிறைச்சாலை தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது, சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவில் கடமையாற்றிய 10 அதிகாரிகள் உயிரிழந்தனர். கடமையின் போது ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளால் அவர்களின் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, எதிர்பாராத மற்றும் அவசரமான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நிவாரணத்தை வழங்குவது முக்கியமானது எனத் தெரிவித்தார்.

அதிகாரிகளின் உயிரிழப்புத் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ தகவல்களும் முழுமையாக கிடைக்கும் வரை காத்திருக்காமல், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறைத்துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தேவையான காப்பீட்டு இழப்பீட்டை துரிதமாக வழங்குவதற்கு தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியம் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன், அவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்திற்கொண்டு மேலதிக நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் மட்டும் சிறைச்சாலை திணைக்களத்தின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு மேலும் பல்வேறு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் சிறைச்சாலை திணைக்களம் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடமையின்போது உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர