யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணைகளின் போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையாக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றிருந்த காரணத்தினால், வழக்கை வேறு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐந்து காணிகளை கொள்வனவு செய்ததன் ஊடாக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து சட்டமா அதிபரினால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.