தெஹிவளை மற்றும் இரத்மலானை காணிக் கொள்வனவு தொடர்பான பணச்சலவை வழக்கில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு குறித்து குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.