யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்குக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.

ஒக்டோபர் 29, 2025 - 15:25
ஒக்டோபர் 29, 2025 - 17:25
யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்குக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (29) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.

வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, வழக்கு விசாரணைக்கு திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் அரச தரப்பு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சம்பத் மெண்டிஸ், பிரதிவாதிகள் கோரிய பல ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், பின்னர் அவர்கள் வழக்கில் தங்கள் வாக்குமூலங்களை முன்வைப்பார்கள் என்றும் கூறினார்.

சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகள் மீது மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்தார், அவர்கள் மார்ச் 31, 2009 முதல் டிசம்பர் 12, 2013 வரை மூன்று தனியார் வங்கிகளில் நிலையான வைப்பு கணக்குகளில் அவர்கள் 59 மில்லியன் ரூபாயை வைப்பிலிட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!