மூன்று பாகங்களாக உருவாகும் ‘அனிமல்’ – இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த ரன்பீர் கபூர்

டெட்லைன் ஹாலிவுட்-க்கு அளித்த பேட்டியில், ‘அனிமல் பார்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2027ஆம் ஆண்டில் தொடங்கும் என அவர் உறுதிப்படுத்தினார்.

ஜனவரி 27, 2026 - 15:58
மூன்று பாகங்களாக உருவாகும் ‘அனிமல்’ – இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த ரன்பீர் கபூர்

இயக்குநர் Sandeep Reddy Vanga இயக்கத்தில், Ranbir Kapoor, Rashmika Mandanna மற்றும் Triptii Dimri நடித்த ‘Animal’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பதிவு செய்து அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். டெட்லைன் ஹாலிவுட்-க்கு அளித்த பேட்டியில், ‘அனிமல் பார்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2027ஆம் ஆண்டில் தொடங்கும் என அவர் உறுதிப்படுத்தினார். இதில் ரன்பீர் கபூர் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், முதல் பாகத்தின் இறுதியில் காட்டப்பட்டதுபோல் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வில்லன் கதாநாயகனைப் போல மாறும் கதைக்களம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ‘அனிமல்’ திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கும் திட்டம் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் இருப்பதாகவும் ரன்பீர் கபூர் கூறினார். படத்தில் இடம்பெற்ற வன்முறை மற்றும் பெண்களைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து பேசுகையில், ‘அனிமல்’ சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது என்றும், நடிகராக பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியம் என்றும் அவர் விளக்கினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!