கொழும்பில் பாடசாலை கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் இரண்டாவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கொழும்பில் பாடசாலை கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் இரண்டாவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (11.03.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மூடியிருந்த வகுப்பறைக்குள் ஜன்னல் வழியாக நுழைய முயன்றபோது மாணவன் தவறி விழுந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்று பள்ளியின் வருடாந்திர கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் பெரும்பாலான மாணவர்கள் அதில் பங்கேற்றிருந்தனர். இதனால் வகுப்பறை மூடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT