முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!

அவரது இல்லத்தில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்கிரமரத்ன, தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கருதப்படும் நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

சி.டி. விக்கிரமரத்ன, பொலிஸ் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்பதோடு, நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

⚠️ கவனிக்க: வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களும் தோல்விகளும் நிரந்தரமானவை அல்ல. அவை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அதற்கான தீர்வுகள் எப்போதும் இருக்கின்றன. மனம் வலிக்கும் நேரங்களில் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. நம்பகமான ஒருவரிடம் மனம் திறந்து பேசுவதும், உதவி கேட்பதும் தைரியத்தின் அடையாளம். உடனடி உதவிக்காக இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலவச உதவி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுங்கள். உங்களின் உயிர் மிகவும் மதிப்புடையது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT