தெஹிவளை மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு; வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள்!

முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பொது மயானத்துக்குள் நுழைந்த இருவரே 9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
தெஹிவளை மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு; வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தெஹிவளை 'நிசல செவன' பொது மயானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் "சண்டோ" என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என்றும் இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துப்பாக்கிச் சூட்டினால் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பொது மயானத்துக்குள் நுழைந்த இருவரே 9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள், துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி வீடியோ ஊடாக வௌிவந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர