கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் படுகாயம்
கொள்ளுப்பிட்டி, 6 ஆம் ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியில் இருந்ததாகக் கருதப்படும் நபர் ஒருவர், கட்டடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பெண்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.