கொழும்பு ஹோட்டலில் சிக்கிய பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் – 463 கிலோ ‘ஐஸ்’ விவகாரத்தில் கைது!

துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் பெருமளவிலான சந்தேகத்துக்கிடமான போதைப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு ஹோட்டலில் சிக்கிய பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் – 463 கிலோ ‘ஐஸ்’ விவகாரத்தில் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராம் ‘ஐஸ்’ எனப்படும்  Crystal Methamphetamine போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூவரும், கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCIB) அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் பெருமளவிலான சந்தேகத்துக்கிடமான போதைப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT