14 நாள்களில் 850 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கடந்த 14 நாட்களில் ‘யுக்திய’ தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
189 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,298 நபர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், 1,018 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் வீடுகள்... விவரம் இதோ!
மேலும், சட்ட விரோத சொத்துக்கள் மற்றும் சொத்துகள் விசாரணை பிரிவினரால் ரூ. 558.5 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி ரூ. 858 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் பின்வருமாறு:
11 கிலோ 600 கிராம் ஹெராயின்
08 கிலோ 378 கிராம் ‘ஐஸ்’
297 கிலோ 8 கிராம் கஞ்சா
2,110,500 கஞ்சா செடிகள்
119 கிலோ 600 கிராம் ‘மாவா’
35 கிலோ 800 கிராம் ஹாஷ்
01 கிலோ 70 கிராம் ஹஷிஷ்
03 கிலோ 700 கிராம் ‘துல்’
555 கிராம் குஷ் கஞ்சா
72,272 போதை மாத்திரைகள்