மின்னல் தாக்கி களத்தில் பலியான கால்பந்து வீரர்

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Feb 12, 2024 - 19:36
மின்னல் தாக்கி களத்தில் பலியான கால்பந்து வீரர்

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில், மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக வீரர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பந்தை பாஸ் செய்ய மற்றொரு வீரர் ஆர்வமாக இருந்தார்.

அப்போது, மின்னல் தனியாக நின்று கொண்டிருந்த வீரரை தாக்குகிறார். இதில், அவர் கீழே விழுந்த நிலையில், சக வீரர் வேகமாக ஓடிச் சென்று பார்க்கிறார். 

இதையடுத்து அவர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...