சமநிலையில் முடிந்த அமெரிக்கா, வேல்ஸ் இடையிலான போட்டி

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.

Nov 22, 2022 - 10:06
Nov 22, 2022 - 10:09
சமநிலையில் முடிந்த அமெரிக்கா, வேல்ஸ் இடையிலான போட்டி

உலகக்கிண்ண கால்பந்து  

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.

இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்