கால்பந்து உலகக் கிண்ணம் பிரமாண்டமாகத் தொடங்கியது

கால்பந்து உலகக் கிண்ணம் போட்டி வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கத்தாரில் கோலாகலமாகத் தொடங்கியது.

Nov 21, 2022 - 07:20
Nov 21, 2022 - 07:31
கால்பந்து உலகக் கிண்ணம் பிரமாண்டமாகத் தொடங்கியது

FIFA World Cup 2022 - கால்பந்து உலகக் கிண்ணம் 2022

கால்பந்து உலகக் கிண்ணம் போட்டி வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கத்தாரில் கோலாகலமாகத் தொடங்கியது.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு அரபு நாடான கத்தாரில் நடைபெறுகிறது.

மிகவும் சிறிய நாடான கத்தார் கால்பந்து திருவிழாவிற்காகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக பெருந்தொகையை கத்தார் செலவு செய்துள்ளது. 

கத்தாரின் 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

டிசம்பர் 18 வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 

இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாடான கத்தார் நேரடியாகப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.

32 அணிகளும் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெறும் நாள் எப்போது வரும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்துள்ளது. 

மிகவும் பிரமாண்டமாக வண்ணமயமான வானவேடிக்கைகள், நடனம், இசை எனக் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் உற்சாகத்திற்குப் பஞ்சமில்லாமல் தொடக்க விழா நடைபெற்றது.

இதனை கால்பந்து போட்டியாளர்களும், ரசிகர்களும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

போட்டியின் முதல் நாளில் கத்தார் மற்று ஈகுவாடர் அணிகள் மோதின

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்