அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம்: உடந்தையாக இருந்த இரு சகோதரர்கள் கைது

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கொட்டாவை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம்: உடந்தையாக இருந்த இரு சகோதரர்கள் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கொட்டாவை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் போது, குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றத்தில் தொடர்புடைய பிற நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -