தந்தையின் பெயரில் வாங்கி மகளுக்கு நன்கொடையாக மாற்றப்பட்ட ரூ.2.5 கோடி வீடு! ஷிரான் பாசிக்கின் சொத்து முடக்கம்

சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான காணியும் மூன்று மாடி வீடும், ஷிரான் பாசிக்கினால் தனது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் நன்கொடை உறுதிப்பத்திரம் ஊடாகத் தனது மகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தந்தையின் பெயரில் வாங்கி மகளுக்கு நன்கொடையாக மாற்றப்பட்ட ரூ.2.5 கோடி வீடு! ஷிரான் பாசிக்கின் சொத்து முடக்கம்
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றை முடக்குவதற்கு மத்திய குற்ற விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான காணியும் மூன்று மாடி வீடும், ஷிரான் பாசிக்கினால் தனது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் நன்கொடை உறுதிப்பத்திரம் ஊடாகத் தனது மகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, குறித்த வீட்டையும் காணியையும் விற்பனை செய்வதையோ அல்லது வேறு நபர்களுக்கு மாற்றுவதையோ தடுக்கும் வகையில், நேற்று (13) முதல் அமுலாகும் வகையில் 14 நாட்களுக்குச் செயலிழக்கச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான மேலும் பல சொத்துகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT