பாடசாலை அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்! 2027 வரவு - செலவுத் திட்டத்தில் புதிய அறிவிப்பு

கல்விசார் பொருட்களின் விலையைக் குறைக்கும் நோக்கில் அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்களுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு 2027 வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.

பாடசாலை அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்! 2027 வரவு - செலவுத் திட்டத்தில் புதிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கல்விசார் பொருட்களை மக்களுக்குக் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், பாடசாலை அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட கல்விசார் வெளியீடுகள் மீதான பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ வரவு - செலவுத் திட்ட உரையின் போது, அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான சித்திரம் மற்றும் வர்ணம் தீட்டும் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட நூல்களுக்கு வற் வரியிலிருந்து விலக்களிக்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட பொருட்களுக்கு 2024 ஜனவரி மாதம் முதல் வற் வரி விதிக்கப்பட்டிருந்ததுடன், அப்பியாசக் கொப்பிகளுக்கு அதற்கு முன்னரே வற் வரி அறவிடப்பட்டு வந்த நிலையில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கல்விசார் பொருட்கள் மீதான வரிச் சுமையைக் குறைப்பதன் மூலம் கல்வி, அறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களின் கீழ், அப்பியாசக் கொப்பிகள், அச்சிடப்பட்ட நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான பட மற்றும் வர்ணம் தீட்டும் புத்தகங்கள், தனித் தாள்களில் அச்சிடப்பட்ட பொருட்கள் மற்றும் அச்சிடப்பட்ட இசைக் குறிப்புகள் ஆகியவற்றின் இறக்குமதி மற்றும் விநியோகத்திற்கு இந்த வரி விலக்குப் பொருந்தும்.

இதேவேளை, திரைப்பட அனுமதிச்சீட்டுகளுக்கான வற் வரியைக் கணக்கிடும் முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவர வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட முறைமையின் கீழ், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் முழுமையான அனுமதிச்சீட்டுப் பெறுமதிக்குப் பதிலாக, தமக்குரிய வருமானப் பங்கிற்கு ஏற்ப மாத்திரம் வற் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், ஆர்ட்டீமியா (Artemia) முட்டைகள் மற்றும் தென்னை நார்க்கழிவு (Coconut coir pith) ஆகியவற்றுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த வற் வரி விலக்கை நீக்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

மேலும், புதிதாகப் பதிவு செய்யப்படும் ஏற்றுமதியாளர்களுக்கான வற் வரி நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கான வற் வரியைக் கணக்கிடுவதற்கு மத்திய வங்கியின் சுட்டிக்காட்டும் நாணய மாற்று வீதத்தை (Indicative exchange rate) அறிமுகப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரவு செலவுத் திட்ட வருமான மதிப்பீடுகளின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த வற் வரித் திருத்தங்கள் 2027 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் 2.975 பில்லியன் ரூபாவினால் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல வரித் திருத்தங்களில் இவையும் உள்ளடங்குகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT