காலி மீன்பிடித் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து: 7 படகுகள் முற்றிலும் தீக்கிரை!

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்திலுள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (08) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 7 படகுகள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன. பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

காலி மீன்பிடித் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து: 7 படகுகள் முற்றிலும் தீக்கிரை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த ஏழு மீன்பிடிப் படகுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக காலி துறைமுகப் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தத் தீ விபத்தின் காரணமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என்று காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஜி.ஏ. புஷ்பகுமார உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, துறைமுக வளாகத்துக்குள் பயன்படுத்தப்படாத நிலையில் படகுகளை நிறுத்தி வைத்திருந்த உரிமையாளர்களை அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும், அவற்றை அங்கு நிறுத்தி வைத்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்து பொலிஸ் மா அதிபருக்கு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட காலி துறைமுகப் பொலிஸார், இலங்கை கடற்படையின் 'தக்ஷிண' முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மீன்பிடிச் சமூகத்தினர் ஒன்றிணைந்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT