இரண்டு ஏக்கர் நிலத்தில் 36,710 கஞ்சா செடிகள்! அதிரடி சுற்றிவளைப்பு – மூவர் கைது
ஊவா மாகாணம் - மொனராகலை மாவட்டம், ஹம்பேகமுவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு திடீர் சோதனையின் போது, சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 36,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதோடு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில், மொனராகல பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திடீர் சோதனையின் போது, 6 முதல் 8 அடி உயரம் வரையிலான கஞ்சா செடிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
36,710 கஞ்சா செடிகளும் அந்த இடத்திலேயே வேரோடு பிடுங்கப்பட்டு, எரிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக ஹம்பேகமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.