வெள்ளம் காரணமாக பரீட்சைக்குச் செல்ல முடியாத சப்ரகமுவ மாணவர்களுக்கு மாற்றுத் திகதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பரீட்சை வாய்ப்பை இழக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விளக்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக பரீட்சைக்குச் செல்ல முடியாத சப்ரகமுவ மாணவர்களுக்கு மாற்றுத் திகதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சப்ரகமுவ மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுப் பரீட்சைத் திகதிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகப் போக்குவரத்துச் சிரமங்கள் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, வெள்ள அனர்த்தத்தால் தமக்கு ஒதுக்கப்பட்ட திகதியில் அழகியல் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்கள், வெள்ள நிலைமை சீரடைந்த பின்னர் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று அறிவிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பரீட்சை நிலையத்துக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, செயன்முறைப் பரீட்சையில் தோற்றுவதற்கான புதிய திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பரீட்சை வாய்ப்பை இழக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விளக்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT