வாய் திறப்பதற்கு முன் சிந்தியுங்கள்! இலங்கை பொலிஸின் பேஸ்புக் பதிவு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியான அச்சுறுத்தல் பதிவுக்கு எதிராக மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

வாய் திறப்பதற்கு முன் சிந்தியுங்கள்! இலங்கை பொலிஸின் பேஸ்புக் பதிவு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அச்சுறுத்தும் வகையில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவு ஒன்றுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

'மாற்றத்திற்கான இளைஞர்கள்' (Youth for Change) அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை பொலிஸாரின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட "வாய் திறப்பதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்!" என்ற வாசகத்தைக் கொண்ட பதிவையே குறித்த அமைப்பு இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பதிவு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

'மாற்றத்திற்கான இளைஞர்கள்' அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி மகாகவித்த, தேசியக் குழு உறுப்பினர் உதார சந்தருவன் மற்றும் கொழும்பு மாவட்டக் குழு உறுப்பினர் டெரன்ஸ் ரொட்ரிகோ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT