எஹலியகொடையில் கொள்ளைச் சந்தேகநபர்கள் பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கைது
எஹலியகொடை, பரகடுவ பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் வேனில் அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பொலிஸார் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த வேனில் பயணித்த ஏனைய சந்தேகநபர்கள் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.