யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் ஒருவர் கைது

திஸ்ஸமஹாராம பகுதியில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் ஒருவர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட நகைகளை சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயதுடைய நபர் ஒருவர் திஸ்ஸமஹாராம பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடவலவ தேசிய பூங்காவின் பூங்கா பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சந்தேகநபரின் உடமையிலிருந்து யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட இரண்டு வளையல்களும் இரண்டு பதக்கங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தீவிரமாகப் பாதுகாக்கப்படும் வனவிலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், கொண்டு செல்லுதல் அல்லது விற்பனை செய்தல் ஆகியன சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட யானைத் தந்த ஆபரணங்களும் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT