6 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நட்டம்! இலங்கையின் அரச ஊடக நிறுவனங்களின் நிலை என்ன?

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் ரூபவாஹினி, ITN மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து 271 மில்லியன் ரூபாய் நட்டத்தை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

6 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நட்டம்! இலங்கையின் அரச ஊடக நிறுவனங்களின் நிலை என்ன?
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் அரச ஒளிபரப்பு நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 271 மில்லியன் ரூபாய் கூட்டு நட்டத்தை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான அரையாண்டு நிதி நிலைமை அறிக்கையின்படி, நாட்டின் பிரதான இரு அரச தொலைக்காட்சி நிறுவனங்களான ரூபவாஹினி மற்றும் ITN ஆகியன இணைந்து ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் 203 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளன. இதில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் வரிக்கு முந்தைய நட்டமாக 166 மில்லியன் ரூபாவையும், சுயாதீன தொலைக்காட்சி சேவை 37 மில்லியன் ரூபாவையும் பதிவு செய்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரூபவாஹினி நிறுவனம் கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் 191 மில்லியன் ரூபாய் நட்டத்தை பதிவு செய்திருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே பதிவான 166 மில்லியன் ரூபாய் நட்டமானது கடந்த ஆண்டின் மொத்த நட்டத்தில் அண்ணளவாக 87 வீதமாகும். இந்நிறுவனம் 2024ஆம் ஆண்டிலும் 247 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்திருந்தமை அதன் தொடர்ச்சியான நிதி நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. 

அதேவேளை, 2024 இல் 3 மில்லியன் ரூபாவையும், 2025 இல் 62 மில்லியன் ரூபாவையும் இலாபமாகப் பதிவு செய்திருந்த ITN நிறுவனம், 2026 இன் முதல் அரையாண்டில் நட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, அரச வானொலி நிறுவனமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாதங்களில் வரிக்கு முந்தைய நட்டமாக 68 மில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் முன்னதாக 2024ஆம் ஆண்டில் 176 மில்லியன் ரூபாவையும், 2025ஆம் ஆண்டில் 203 மில்லியன் ரூபாவையும் நட்டமாக பதிவு செய்திருந்தது. இதன்மூலம் இம்மூன்று அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் மொத்த நட்டம் 271 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பிரதான அரச வர்த்தக நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 259.3 பில்லியன் ரூபாய் கூட்டு இலாபத்தைப் பதிவு செய்துள்ள பின்னணியிலேயே, இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் குறித்த இலாபம் 227.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. அரச வங்கிகள் மற்றும் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் கணிசமான இலாபத்தை ஈட்டிய போதிலும், மதிப்பாய்வுக்குட்பட்ட இக்காலப்பகுதியில் அரச ஒளிபரப்பு நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்திக்கும் நிறுவனங்களாகவே காணப்படுகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT