இலங்கையில் 33 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை! மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம்

இலங்கையில் 33 அரச நிறுவனங்களைக் கலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஊழியர் நிலுவைக் கொடுப்பனவுகளுக்காக 2.8 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் 33 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை! மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தெரிவு செய்யப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட விசேட அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவினால் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, தெரிவுசெய்யப்பட்ட அரச நிறுவனங்களின் நீண்டகால ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) நிலுவைகளைத் திறைசேரி தீவிரமாகச் செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையான 5 பில்லியன் ரூபாயில், 2026 ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 2.8 பில்லியன் ரூபாய் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் கட்டளைகள் இரத்துச் செய்யப்படுதல் போன்ற கடுமையான இரண்டாம் காலாண்டு சவால்களை எதிர்கொண்ட போதிலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 முக்கிய அரச நிறுவனங்கள் இணைந்து 259.3 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பதிவு செய்துள்ளன. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 227.8 பில்லியன் ரூபாய் கூட்டு இலாபத்துடன் ஒப்பிடுகையில் 31.5 பில்லியன் ரூபாய் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT