கம்பஹா மற்றும் களனி உட்பட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை 13 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை கம்பஹா மற்றும் களனிக்குட்பட்ட பல பகுதிகளில் 13 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் களனி உட்பட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை 13 மணித்தியால நீர் வெட்டு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 14) கம்பஹா மற்றும் களனி ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் 13 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின்சாரம் வழங்கும் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமலில் இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, பேலியகொடை, வத்தளை-மாபோல, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவை ஆகிய நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை அமலில் இருக்கும் காலப்பகுதியில், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1939 என்ற சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT