உலக கிண்ண கால்பந்து - முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார்
ஆட்டம் தொடங்கிய 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஈகுவடார் அணியின் வேலன்சியா கோலாக மாற்றினார்.

FIFA World Cup 2022 - கால்பந்து உலக கிண்ணம் 2022
22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 18 வரை நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஈகுவடார் அணியின் வேலன்சியா கோலாக மாற்றினார்.
Also Read: கால்பந்து உலகக் கிண்ணம் பிரமாண்டமாகத் தொடங்கியது
தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

