சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்: 4 ராசிகளுக்கு செல்வம், சொத்து சேரும்!

2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி 24, 2026 - 08:29
சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்: 4 ராசிகளுக்கு செல்வம், சொத்து சேரும்!

2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யோகம் மார்ச் 26, 2026 வரை நீடிக்கும். மார்ச் 26 அன்று சுக்கிரன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்ததும் இந்த யோகம் நிறைவடையும். இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசிக்கு சுக்கிரன் ஆதிபதியாக இருப்பதால், இந்த மாளவ்ய ராஜயோகம் நேரடி நன்மைகளை அளிக்கும் என நம்பப்படுகிறது. செல்வம், செழிப்பு, ஆடம்பரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த பணவரவு கைக்கு வரும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து, சொத்து வாங்கும் வாய்ப்பும் உருவாகலாம். திருமண மற்றும் குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் நிலைக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும் காலமாக இது அமையும் என கூறப்படுகிறது. பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். நிதி ஆதாயங்கள் மற்றும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் தெளிவு அதிகரிக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும் காலமாக இது இருக்கும். தலைமைத் திறன் வெளிப்படும். அரசு அல்லது நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலாம். நீண்டநாள் பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி சுக்கிரனின் ஆதிக்கத்தில் இருப்பதால், இக்காலம் நல்ல தொடக்கமாக அமையும் என கூறப்படுகிறது. நீண்டநாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. செல்வம், அழகு, ஆடம்பரம் அதிகரிக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சூழல் உருவாகலாம்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பஞ்சாங்க கணிப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இவை அறிவியல் ஆதாரமற்ற கணிப்புகள். எந்த முக்கிய தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன் துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!