அஸ்வெசும கடன் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும கடன்
அஸ்வெசும கடன் திட்டமொன்று இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின் ஊடாக தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றுக்காக விசேட முறைமையின் கீழ் கடன்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நலன்புரி திட்டங்கள் ஊடாக மாத்திரம் நாட்டை வளப்படுத்த முடியாது என்றும் சிறந்த உற்பத்திகள் மூலமாகவே நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
