12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - 11.02.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - 11.02.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - 11.02.2025
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேஷம்

உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பொறுமை அவசியம். பழைய வாகனம் நல்ல விலைக்கு விற்பீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரிஷபம்

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடலில் எலும்புப் பிரச்சினை தீரும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள்.

மிதுனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT

திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். புதிய முயற்சிகள் பலிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். அதற்குண்டான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்

பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள்.சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

சிம்மம்

நீண்ட கால கனவு நனவாகும். ரசனைக் கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.

கன்னி

வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். தங்கள் வழக்கு சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் சேருவர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

துலாம்

மாணவர்கள் அடிக்கடி விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.

விருச்சிகம்

கடையை விரிவுப்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும். ஒரு சிலர் புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்ற நட்சத்திரகாரர் எந்த விதமான பாதிப்பும் இன்று இல்லை. உத்திராடம் நட்சத்திரக்காரர் இறைவனை இன்று பிராத்தித்து விட்டு தங்கள் பணியை ஆரம்பியுங்கள்.

மகரம்

காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

கும்பம்

இன்று பணப் பிரச்சினை இருக்காது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். எதிர்பார்த்திருந்த நற்செய்தி வந்து சேரும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

மீனம்

சுபச் செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT