இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்

Dec 11, 2023 - 07:45
இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-25 திங்கட்கிழமை

பிறை: தேய்பிறை

திதி: திரியோதசி இன்று காலை 6.32 மணி வரை. பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: விசாகம் காலை 12.13 மணி வரை. பிறகு அனுஷம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை மற்றும் மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் : விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ரிஷபம் : பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம் : அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அரசுவழி சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கடகம் : தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

சிம்மம் : யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உறவினர் வழியில் மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும்.

கன்னி : வரவைவிட செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

துலாம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

விருச்சிகம் : வரவு திருப்தி தரும் நாள். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

தனுசு : தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

மகரம் : அலைச்சல் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற ஆண்டவனை பிரார்த்திப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள். எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம்.

கும்பம் : இல்லத்தில் மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரென சாதகமாகிவிடும். வியாபார முன்னேற்றம் உண்டு. வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள்.

மீனம் : எதிரிகள் உதிரியாகும் நாள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வு தானாக கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

சந்திராஷ்டமம்: மேஷம்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...