அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 450,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.   

ஜுலை 21, 2024 - 19:49
அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 450,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.   

இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்த பின்னர் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதன்பின், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தொடர்பான ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இறுதியான நிவாரணம் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ஏற்கெனவே கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஏனைய மாகாணங்களில் அதிகாரிகள் தரப்பில் தயக்கம் காணப்படுவதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது முதற்கட்ட நிவாரணத்தின் கீழ் சுமார் 18 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்தவுடன், அஸ்வெசும பெறும் பயனாளிகளின் தரவுகள் உடனடியாக புதுப்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!