நாட்டின் பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை மற்றும் காற்று

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 19, 2026 - 07:12
நாட்டின் பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை மற்றும் காற்று

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஊவா மாகாணம் மற்றும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!