இன்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு: பல பகுதிகளில் இடைக்கிடை மழை என எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

இன்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு: பல பகுதிகளில் இடைக்கிடை மழை என எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (03) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT