Rasipalan 20th July, 2023: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! பஞ்சாங்கம்

RasiPalan Today June 20: இன்றைய நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை காணலாம்.

Rasipalan 20th July, 2023: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! பஞ்சாங்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

RasiPalan Today June 20: இன்றைய ராசிபலன்

  • நாள்:  20.07.2023 - வியாழக்கிழமை
  • நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
  • இராகு: மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
  • குளிகை: காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
  • எமகண்டம்: காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
  • சூலம் - தெற்கு

மேஷம்

பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். சமூக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரிஷபம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வீடு கட்டுவது தொடர்பாக எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT

மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.

கடகம்

உறவினர்களின் மூலம் உதவி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

சிம்மம்

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பார்வை சார்ந்த பிரச்சனைகள்  ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்

சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

விருச்சிகம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.

தனுசு

உயர்கல்வி தொடர்பான உதவி கிடைக்கும்.  மருத்துவத் துறையில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.

மகரம்

வியாபாரப் பணிகளில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். இறை பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். உடற்பயிற்சி விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உழைப்புக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.

கும்பம்

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை உண்டாகும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழகும் விதங்களில் சில மாற்றம் ஏற்படும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.

மீனம்

நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். செல்ல பிராணிகளிடத்தில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT