மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக தகவல்

விபத்தின் தாக்கத்தால் விமானம் முழுமையாக சேதமடைந்ததாகவும், அஜித் பவார் உள்ளிட்ட விமானத்தில் பயணித்த மேலும் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 28, 2026 - 10:15
ஜனவரி 28, 2026 - 10:15
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ANI செய்தி நிறுவனம் தெரிவித்ததன்படி, பராமதி பகுதியில் தரையிறங்க முயன்றபோது குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தின் தாக்கத்தால் விமானம் முழுமையாக சேதமடைந்ததாகவும், அஜித் பவார் உள்ளிட்ட விமானத்தில் பயணித்த மேலும் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விவரங்களை அதிகாரப்பூர்வ தரப்புகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

இந்த துயரச் சம்பவம் மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!