அஸ்வெசும பயனாளிகளுக்கு மார்ச் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு நாளை (12) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இந்த கட்டணத்திற்காக மொத்தமாக 11,179,801,250 ரூபாவிற்கு அதிகமான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை 2,350,530,000 ரூபாவிற்கு மேற்பட்ட நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர