இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததாக தகவல்

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பான சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 

இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததாக தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பான சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 

இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) தெரிவிக்கையில், "சர்வதேச நீரில் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதப்பட்ட ஈரானியப் போர்க்கப்பல், டார்பிடோ தாக்குதலால் கடலில் மூழ்கடிக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தாக்கப்பட்ட கப்பலின் பெயரை அமெரிக்கத் தரப்பு வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், இலங்கைக் கடற்படை வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் அதிநவீன போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' (IRIS Dena) இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாகவும், அதில் பயணித்த சுமார் 140 மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஈரானின் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்டுள்ள சூழலில், இந்தியப் பெருங்கடலில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் தெற்காசியப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Source: Reuters

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT