“ஈரான் நிபந்தனையற்ற சரணடைய வேண்டும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை; பதிலுக்கு ஈரான் மறுப்பு

போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

“ஈரான் நிபந்தனையற்ற சரணடைய வேண்டும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை; பதிலுக்கு ஈரான் மறுப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்ற சரணடைதல் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெஹ்ரானிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, “நிபந்தனையற்ற சரணடைதலே எங்களின் எதிர்பார்ப்பு. அவர்கள் முழுமையாக போரை நிறுத்த வேண்டும். இனி போராடும் நிலை அவர்களுக்கு இருக்கக் கூடாது” என்று கடுமையாக கூறினார்.

மேலும், தற்போது போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். “ஒரு வாரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நாங்கள் சாதித்துள்ளோம். ஈரானின் கடற்படையில் 44 கப்பல்களை அழித்துள்ளோம். அவர்களின் விமானப்படை திறனை முற்றிலும் சீர்குலைத்துள்ளோம். பல ஏவுகணை அமைப்புகளையும் அழித்துள்ளோம். அவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் இடங்களில் நாங்கள் தாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா இந்த போரில் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். “இந்த போரில் நாங்கள் மிகப்பெரிய முன்னிலை பெற்றுள்ளோம். அவர்களின் தீவிர நடவடிக்கைகளை முடக்கி வருகிறோம். இது இன்னும் சில காலம் நீடிக்கலாம். இருந்தாலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இதற்கிடையில், ஈரான் அமெரிக்கா மீது ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாசுபடுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலளித்த டிரம்ப், ஈரானை கடுமையாக விமர்சித்தார். “அவர்கள் உலகில் மிக மோசமான செயல்களைச் செய்பவர்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். நீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்து அவர்கள் குற்றம் சாட்டினாலும், பொதுமக்கள் மீது நடக்கும் வன்முறைகளையே நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்” என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரஷ்யா ஈரானை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கும் டிரம்ப் பதிலளித்தார். “அதற்கான தெளிவான அறிகுறி எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவர்கள் ஆதரித்தால் கூட அது பயனளிக்கவில்லை, ஏனெனில் ஈரான் தற்போது நல்ல நிலையில் இல்லை” என்றார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் சரணடைதல் கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் இதுகுறித்து பேசும்போது, “ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நீங்கள் அமெரிக்காவுக்கு உதவாதவரை இனி எங்கள் தாக்குதல்கள் இருக்காது. இந்த பிரச்சினையை ராஜதந்திர வழியில் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஈரானிய மக்கள் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை எதிரிகள் மறந்து விட வேண்டும் என்றும் அவர் கடுமையாக கூறினார். “ஈரான் சரணடையும் என்ற எண்ணத்தை எங்கள் எதிரிகள் தங்கள் கல்லறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT