ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகையையும் மீறி கப்பல் போக்குவரத்து தொடர்கிறதா?
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்டு அமல்படுத்திய முற்றுகை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
BBC Verify வெளியிட்ட தகவலின்படி, அண்மையில் ஈரானிய துறைமுகங்களுக்கு சென்ற இரண்டு கப்பல்கள் உள்ளிட்ட? ஈரானுடன் தொடர்புடைய குறைந்தது நான்கு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்ததாக கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.
மேலும், முற்றுகை திங்கட்கிழமை காலை 10:00 ET (14:00 GMT) மணிக்கு அமலுக்கு வந்த பிறகு, ஈரானுடன் நேரடி தொடர்பில்லாத மேலும் மூன்று கப்பல்களும் அந்த முக்கிய கடல்பகுதியை கடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதற்கு மாறாக, அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட அறிக்கையில், முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் முற்றுகையை வெற்றிகரமாக மீறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த முரண்பட்ட தகவல்கள், அமெரிக்க முற்றுகையின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
உலகளவில் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் இந்த நிலைமை, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.