பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7,99,692 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கு மேலாக தனித்தேர்வர்களாக 27,783 பேரும், சிறைத்தேர்வர்களாக 281 பேரும் பங்கேற்கின்றனர். மொத்தமாக 8,27,475 பேர் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

முதல் நாளான இன்று தமிழ் மற்றும் பிற மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வு நடைபெறும். அதன் பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுகள் நிர்ணயிக்கப்பட்ட இடைவெளிகளில் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுத்தேர்வை சீராக நடத்த அரசு தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்வறை கண்காணிப்பாளர்களாக 44,624 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வுக் கண்காணிப்பு படையாக 4,540 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவுவதற்காக 7,465 சொல்வதை எழுதுபவர்கள் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று தொடங்கியுள்ள இந்த பொதுத்தேர்வு வரும் 26ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் ஆர்வத்துடன் தயாராகி தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர். தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT