மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு: 'பஸ் லலித்' அளித்த தகவல்
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 'பஸ் லலித்' வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான 'பஸ் லலித்' எனப்படும் லலித் கண்ணங்கரவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையின் போது கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதன்போது குறித்த மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி ஒன்று, ரீப்பீட்டர் (Repeater) ரக துப்பாக்கி ஒன்று மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -