விசாரணையின் பின் நாமல் ராஜபக்ஷ கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 5 மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின் நாமல் ராஜபக்ஷ கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய வகையில் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று முற்பகல் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புலனாய்வு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சந்தேகநபராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர