வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை, கதிரான பாலம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிவு (ஜூலை 23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு அங்கிருந்த மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தெமட்டகொட பகுதியில் ஏற்கெனவே ஒரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் நாட்டில் பதிவான உயிரிழப்புடன் கூடிய இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர