2025 இல் நேவி ப்ளூ புடவைகள் டாப் டிரெண்ட்
யார் யாரெல்லாம் இந்த நீல நிற டிரெண்டை ராக்கிங் செய்கிறார்கள், அவர்கள் லுக்கில் என்ன ஸ்பெஷல்ஸ் இருக்கிறது என்று பார்க்கலாம்.
இப்போது சமூக வலைதளங்களை கலக்கிக் கொண்டிருக்கிற நிறம் — நேவி ப்ளூ புடவைகள்!
சமந்தா, ஸ்ரீலீலா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகைகள் இந்த நிறத்தில் நடத்திய போட்டோஷூட்கள், பெண்களின் ஷாப்பிங் லிஸ்டை நேராக தாக்கி இருக்கிறது. பாரம்பரிய புடவைகளில் நவீன ஸ்டைலை கலந்து, ‘ஸ்டைல் + எலெகன்ஸ்’ என்ற சூப்பர் காம்போவாக இந்த டிரெண்ட் மாறிவிட்டது.
இப்போது யார் யாரெல்லாம் இந்த நீல நிற டிரெண்டை ராக்கிங் செய்கிறார்கள், அவர்கள் லுக்கில் என்ன ஸ்பெஷல்ஸ் இருக்கிறது என்று பார்க்கலாம்.
1. ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவின் இளம் சென்சேஷன் ஸ்ரீலீலா, லேசான வெல்வெட் நேவி ப்ளூ சேலையுடன் அசத்தல் தோற்றத்தில் மின்னுகிறார்.
தங்க நூல் கோடுகள்
எம்பிராய்டரி செய்யப்பட்ட ஷராரா பேன்ட்
கிராப் டாப் காம்போ
மெலிதான டசல் பார்டர்
ஒரு பாரம்பரிய சேலையை முழுக்க மாடர்ன் லுக்காக மாற்றியிருப்பது இவரின் லுக்கின் ஹைலைட்!
2. சமந்தா
ஏகா பிராண்டின் ஊதா கலந்த நேவி ப்ளூ ஆர்கன்சா சேலையில் சமந்தாவின் சமீபத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
தங்க நிற வரி கொண்ட பார்டர்
நுட்பமான ஜாக்கார்ட் புட்டிகள்
ஸ்லீக் கட் பிளவுஸ்
இவையெல்லாம் சேர்ந்து, ‘சிம்பிள் ஆனாலும் ராயல்’ லுக் கொடுக்கும்.
3. தமன்னா
ஜெயந்தி ரெட்டி டிசைன் செய்த இந்த நீல சேலை ஸ்காலப் பார்டர்களும் சிக்கலான நூல் எம்பிராய்டரியும் கொண்டு கண்களை கவர்கிறது.
வெள்ளி எம்பிராய்ட்ரி பிளவுஸ்
ரிச் டெக்ஸ்சர்
தமன்னாவின் லுக்கில் ஒரு ராயல் ஸ்பார்கில் இதனால் வந்திருக்கிறது.
4. கீர்த்தி சுரேஷ்
லேபிள் ஜேடன் உருவாக்கிய அடர் நீல புடவை, தங்க மலர் மோட்டீப்களுடன் மிக அழகாக ஒளிர்கிறது.
ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்
மினிமலிஸ்ட் ஜுவல்லரி
நேச்சுரல் மேக்கப்
எளிமையாக இருந்தாலும் ரீகல் டச் கொண்ட லுக்கை கீர்த்தி effortlessly ராக்க் செய்கிறார்.
5. அதிதி ராய்
ஊதா கலந்த அடர் நீல சாடின் பட்டு புடவையில் அதிதியின் தோற்றம் நிச்சயமாக பிரீமியம்!
மெட்டல் சீக்வின்கள்
நேரியல் கை எம்பிராய்டரி
ஜமுனி ஊதா பிளவுஸ்
சர்தோசி நக்ஷி எம்பிராய்ட்ரி இவரின் லுக்கை இன்னும் ரிச் ஆக்கியுள்ளது.
நயன்தாரா, நிக்கி கல்ராணி, ஹனி ரோஸ் போன்ற பல நடிகைகளும் ஏற்கனவே இந்த நேவி ப்ளூ டிரெண்டை தங்கள் வார்ட்ரோபில் சேர்த்துவிட்டனர்.
எளிமை, ஸ்டைல், பாரம்பரியம், நவீனத்தனம் — எல்லா காம்பினேஷனும் சேர்ந்த கலவை என்பதால், இந்த ஆண்டு நேவி ப்ளூ புடவைகள் டாப் டிரெண்ட் செட்டர் ஆனது ஆச்சரியமில்லை!