வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜுலை 10, 2025 - 11:07
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகையான  ஹுமைரா அஸ்கர் அலி (32), வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் நேற்று அங்கு சென்றுபார்த்தபோது ஹுமைரா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர். உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இரு வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர்தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!