தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
கலவரத்தின் காரணமாக சிறைச்சாலையின் பல கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் அரச சொத்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் ஆழ்ந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்ததாகக் கூறிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.