சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

சுரேஷ் சலேவுக்கு சிகிச்சை வழங்கி வரும் விசேட மருத்துவக் குழுவில் அங்கம் வகிக்கும் 10 வைத்தியர்களுக்கே கொழும்பு நீதவான் பசந்த அமரசேன இந்த அறிவித்தல்களைப் பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நகர்த்தல் பத்திரம் ஊடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT