இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பந்துல குணவர்தன  வாக்குமூலம்

2007 ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான விசாரணைகளுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன வெளியேறியுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பந்துல குணவர்தன  வாக்குமூலம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவே அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, இன்றைய தினம் காலையில் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னிலையான பந்துல குணவர்தன, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் வளாகத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT